News November 4, 2025
FILES, PILES என பெயர் வைத்தால் விருது: பிரகாஷ்ராஜ்

மம்முட்டிக்கு கேரள அரசின் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய விருதில் அவருக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே தெரிகிறது, அது நடுநிலையுடன் வழங்கப்படுவதில்லை என்று விமர்சித்துள்ளார். இதை சொல்ல தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 5, 2025
கோவை கொடூரத்தால் மிகுந்த வேதனை: கனிமொழி

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.
News November 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 5, 2025
களத்தில் ரவி அஷ்வினுக்கு பலத்த காயம்

காயம் காரணமாக ஆஸ்திரேலிய BBL டி20 தொடரில் இருந்து ரவி அஷ்வின் விலகியுள்ளார். சிட்னி தண்டர்ஸ் அணியில் விளையாட ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஷ்வின், தொடருக்கு தயாராகும் விதமாக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, முழங்காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.


