News November 4, 2025
டிசம்பர் 1-ம் தேதி முதல் விலை உயருகிறது?

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல், வாடிக்கையாளர்களுக்கு Jio, Airtel, VI
நெட்வொர்க்குகள் அதிர்ச்சி தரவுள்ளன. ஆம், ரீசார்ஜ் கட்டணங்களை 10- 12 % வரை இந்நிறுவனங்கள் உயர்த்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை, ₹199 ரீசார்ஜ் பிளான், இனி ₹222 ஆகவும், ₹899 ஆக ரீசார்ஜ் பிளான், இனி ₹1006 ஆக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது. நீங்க மாதம் எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்றீங்க?
Similar News
News November 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 5, ஐப்பசி 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News November 5, 2025
எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத கொடூரம்: சிபிஆர்

கோவை கொடூரத்தில் பாதிக்கப்பட பெண்ணுக்கு, நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மையிலேயே எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரமானது கொங்கு மண்ணில் நடந்தது தாங்க முடியாத வேதனையை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவது போலீசின் பொறுப்பு என்று சிபி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
News November 5, 2025
கோவை கொடூரத்தால் மிகுந்த வேதனை: கனிமொழி

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.


