News November 4, 2025

திண்டுக்கல்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

Similar News

News November 5, 2025

வத்தலகுண்டு வாலிபருக்கு கத்திகுத்து!

image

திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் பாண்டியராஜன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சித்தரேவை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் குடிபோதையில் பைக் வேண்டும் என கேட்க பாண்டியராஜன் மறுத்க்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் பாண்டியராஜனை கத்தியால் வெட்டினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சூரிய பிரகாஷை இன்று கைது செய்தனர்.

News November 5, 2025

திண்டுக்கல்;போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

திண்டுக்கல் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 5) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் குறைகள், மனுக்கள் பெறப்படும். பழனி நகராட்சியில் உடுமலை ஆயுரா வைஸ்யர் மடம், நிலக்கோட்டை வட்டத்தில் குல்லிசெட்டிபட்டி பொம்முச்சாமி திருமண மஹால், ரெட்டியார்சத்திரம் வட்டத்தில் அனுமந்தராயன் கோட்டை லொயோலா மண்டபம், சாணார்பட்டி வட்டத்தில் வேம்பார்பட்டி அம்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.

error: Content is protected !!