News November 4, 2025
பெண்களுக்கு தாலி கட்டாயம் இல்லை: சின்மயி கணவர்!

தாலி அணிவது பெண்களின் விருப்பம், அது கட்டாயம் இல்லை என சின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சின்மயியிடமும் திருமணத்திற்கு பிறகு தாலி அணிவது உன்னுடைய விருப்பம் என கூறியதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். வரும் 7-ம் தேதி ராகுலின் இயக்கத்தில், ரஷ்மிகா நடித்துள்ள ‘The Girlfriend’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் கருத்து பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News November 4, 2025
PAK-கிற்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் சீனா

சீனாவின் அதிநவீன 8 நீர்மூழ்கி போர் கப்பல்களை (Hangor – Class Diesel – Electric Submarines) அடுத்த ஆண்டு தங்களது கடற்படையில் சேர்க்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இவை அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்டிருப்பதோடு, நீருக்குள் வாரக்கணக்கில் இருக்கும் அளவிற்கு பேட்டரி திறனை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 4, 2025
திமுகவுக்கு தாவிய அதிமுக Ex.அமைச்சர்கள்… PHOTOS

திமுகவில் இன்று அமைச்சர்களாகவும், முக்கிய பொறுப்புகளிலும் உள்ள பிரபலமான பலர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தெரியுமா? அப்படி எதிரணியில் இருந்து திமுகவுக்கு சென்றவர்களில் பிரபலமான சிலரின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து பாருங்கள். இந்த பட்டியலில் விடுபட்ட முக்கியமானவர்கள் யாரேனும் உள்ளனரா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News November 4, 2025
சூடுபிடிக்கும் மகளிர் பிரீமியர் லீக்

2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலம், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீராங்கனைகளின் பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்குமாறு, அணி நிர்வாகங்களுக்கு BCCI அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ODI உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றுள்ளதால், 2026 WPL-க்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


