News November 4, 2025
வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

வேலூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 4, 2025
பள்ளிகொண்டா வீடு வீடாக படிவங்களை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.4) பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்காக படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
News November 4, 2025
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறப்பு!

வேலூர்: வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இலவச தொலைபேசியில் 1950 என்ற எண்ணுக்கு காலை 10.00 மணிமுதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தொகுதி வாரியாக படத்தில் உள்ள தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
வேலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

வேலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 ) 2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 ) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 ) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 ) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


