News November 4, 2025
ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 4, 2025
TNPSC குரூப் 2 மற்றும் 2A இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி II & llA ( group ll& llA) இட்ட முதன்மை எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நாளை (05.11.2025) தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் புகைப்படம் 2 ஆதார் அட்டை நகல் 1 உடன் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
News November 4, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ -04) மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட மருத்துவ அலுவலர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 4, 2025
சிறப்பு தீவிர திருத்த கணக்கீடு படிவம் ஆட்சியர்

கூடலூர் ஊராட்சி கங்கை மோட்டூர் கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர திருத்த கணக்கீடு படிவத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.4) தேதி வழங்கினார். இதில் வாக்காளர் பதிவு அலுவலர் மீனா, வட்டாட்சியர் செல்வி மற்றும் அருள் செல்வம் உடன் இருந்தனர். வாக்காளர் விவரத்தை முழுவதுமாக பூர்த்தி செய்து தர வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.


