News November 4, 2025

BIG NEWS: அதிமுக எம்எல்ஏ ராஜினாமா.. பெரும் அதிர்ச்சி

image

<<18194000>>திமுகவில் இணைந்த<<>> OPS ஆதரவு, ஆலங்குளம் அதிமுக எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தற்போது பாஜகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். திராவிட கொள்கையை உண்மையாக பின்பற்றக்கூடியது திமுக என்பதால் தான் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

பள்ளிகொண்டா வீடு வீடாக படிவங்களை வழங்கிய கலெக்டர்

image

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.4) பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்காக படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

News November 4, 2025

PAK-கிற்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் சீனா

image

சீனாவின் அதிநவீன 8 நீர்மூழ்கி போர் கப்பல்களை (Hangor – Class Diesel – Electric Submarines) அடுத்த ஆண்டு தங்களது கடற்படையில் சேர்க்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இவை அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்டிருப்பதோடு, நீருக்குள் வாரக்கணக்கில் இருக்கும் அளவிற்கு பேட்டரி திறனை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 4, 2025

திமுகவுக்கு தாவிய அதிமுக Ex.அமைச்சர்கள்… PHOTOS

image

திமுகவில் இன்று அமைச்சர்களாகவும், முக்கிய பொறுப்புகளிலும் உள்ள பிரபலமான பலர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தெரியுமா? அப்படி எதிரணியில் இருந்து திமுகவுக்கு சென்றவர்களில் பிரபலமான சிலரின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து பாருங்கள். இந்த பட்டியலில் விடுபட்ட முக்கியமானவர்கள் யாரேனும் உள்ளனரா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!