News November 4, 2025

FLASH: ஏற்றம் கண்டு மீண்டும் இறங்கிய பங்குச் சந்தைகள்!

image

இன்று வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள் சற்றுமுன் மீண்டும் சரிவை கண்டுள்ளன. சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து 83,826 புள்ளிகளிலும், நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 25,713 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Bharti Airtel, Titan Company, Shriram Finance-ன் பங்குகள் ஏற்றத்தையும், Coal India, Maruti Suzuki, Axis Bank சரிவையும் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News November 5, 2025

CBSE தேர்வு அட்டவணையில் தமிழுக்கு பாதகம்: அன்புமணி

image

CBSE 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2-ம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் மாணவர்களுக்கு பாதகமாகவும் அட்டவணை இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி தேர்வுக்கு முன்னும் பின்னும் 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை இருப்பது போல, தமிழுக்கும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 5, ஐப்பசி 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News November 5, 2025

எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத கொடூரம்: சிபிஆர்

image

கோவை கொடூரத்தில் பாதிக்கப்பட பெண்ணுக்கு, நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மையிலேயே எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரமானது கொங்கு மண்ணில் நடந்தது தாங்க முடியாத வேதனையை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவது போலீசின் பொறுப்பு என்று சிபி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

error: Content is protected !!