News November 4, 2025

தென்காசி: சிறப்பு திருத்த உதவி மையம்

image

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம் 2025 தொடர்பாக தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்படி உதவி மையத்தின் 04633-222212 & 6381443953 ஆகிய தொலைபேசி எண்களில் தீவிர திருத்தம் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பாக 1950 என்ற கட்டணமில்லா வாக்காளர் உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்

Similar News

News November 4, 2025

BREAKING: ஆலங்குளம் MLA இராஜினாமா

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்

News November 4, 2025

திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்எல்ஏ

image

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ- வாக இருந்து வருபவர் OPS தீவிர ஆதரவாளான மனோஜ்பாண்டியன் இன்று திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அவருடன் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 4, 2025

தென்காசி: வீடு கட்ட அரசு தரும் லோன் – APPLY!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!