News November 4, 2025
இப்படி பண்ணா உங்க போனும் வெடிக்கலாம்.. உஷாரா இருங்க!

ரோட்டில், ஆபீஸில் என பல நேரங்களில், திடீரென போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு பல காரணிகள் இருந்தாலும், முக்கிய காரணமாக, போனைக் கூடுதல் நேரம் சார்ஜில் போட்டு வைப்பதுதான் என்று கூறப்படுகிறது. அதிக நேரம் சார்ஜாகும் போது, பேட்டரி அதிகமாக சூடாகி விடுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போன் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, போன் சார்ஜில் இருந்தாலும், கவனத்துடன் இருங்கள். SHARE IT
Similar News
News November 4, 2025
1% பணக்காரர்களின் சொத்து 62% ஆக உயர்வு

இந்திய மக்கள் தொகையில் 1% உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 23 ஆண்டுகளில் 62%ஆக உயர்ந்துள்ளதாக ஜி20 அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 54% ஆக உள்ளது. மேலும், உலகளவில் உள்ள 1% பெரும் பணக்காரர்கள், கடந்த 23 ஆண்டுகளில் 41% புதிய சொத்துக்களை சேர்த்துள்ளனர். அதேசமயத்தில், உலகின் பாதி மக்கள் வெறும் 1% மட்டுமே சொத்துக்களை சேர்த்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?
News November 4, 2025
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: EPS

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம், EPS வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின்பும் இந்நிலை தொடர்வதாக கூறிய அவர், இலங்கை அரசை தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க திமுக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 4, 2025
FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54 குறைந்து $3,948-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், நாளையும் கணிசமாக விலை குறையலாம். SHARE IT


