News April 19, 2024
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபட் ப்ரூஸ் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒய்.எம்.சி.ஏ ஹோமில் இன்று (ஏப். 19) காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Similar News
News August 19, 2025
பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியிடம் விசாரணை

நெல்லை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன் கடந்த மாதம் களக்காடு யூனியன் அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்கு சென்றபோது பட்டதாரி இளம் பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நாங்குநேரி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் துறை ரீதியான விசாரணை குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழுவினர் அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.
News August 18, 2025
நெல்லை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

நெல்லை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு<
News August 18, 2025
நெல்லை இளைஞர்களுக்கு வேலை – ஆட்சியர் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நிதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் <