News November 4, 2025
புதுகை தவறி விழுந்து தொழிலாளி பலி!

ஆலங்குடி அருகே மாங்கோட்டை தெற்கு பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் 48, சுமை தூக்கும் தொழிலாளி நேற்று வீட்டில் வளர்த்து வரும் மாட்டை பிடித்து கட்ட முயன்ற போது கயிறு காலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்து போனார். இது குறித்து ஆலங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
புதுகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க…
News November 5, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.04) இரவு 10 மணி முதல் இன்று (நவ.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 4, 2025
புதுக்கோட்டை: வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!


