News November 4, 2025

புதுவை: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

image

கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி ஆணையர் ஸ்ரீகிருஷ்ண மோகன் உப்புவிற்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரத் துறை கவனிப்பார். அரசு செயலர் முகமது ஹசன் அபித், உயர்கல்வி துறையை கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

புதுச்சேரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 4, 2025

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கொடிகள் வரும் 6-ம் தேதி முதல் அகற்றப்படும். ஆகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

பாகூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

image

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்ற கலெக்டர் குலோத்துங்கன், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்தும், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்து, பொது மக்களிடம் மருத்துவ சேவை குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பாகூரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்தார்களா, என ஆய்வு செய்தார்.

error: Content is protected !!