News April 19, 2024

நடிகர் சசிகுமார் சொந்த ஊரில் வாக்களித்தார்

image

மக்களவைத் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் காலை 7 மணியளவில் ஒத்தக்கடை அருகிலுள்ள புதுதாமரைப்பட்டி வாக்குச் சாவடிக்கு வந்தார். பின்னர் சுமார் 7.15 மணி அளவில் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Similar News

News September 14, 2025

மதுரை: 5 பேருக்கு மறுவாழ்வு தந்த சிறுவன்

image

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள், ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. மகனது உடல் உறுப்புகளை தானமாக தர ராஜேந்திரன் சம்மதித்தார். கல்லீரல், ஒரு சிறுநீரகம், திருச்சி காவேரி மருத்துவமனைக்கும்; மற்றொரு சிறுநீரகம், மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும்;இரண்டு கருவிழிகள், மதுரை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. சிறுவனின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

News September 14, 2025

மதுரை: தொழிலதிபர் படுகொலை-2 தனிப்படை அமைப்பு

image

மதுரை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் ராஜ்குமார் (வயது 50), நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் மின்விளக்குகள் எரியாத நிலையில் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகள் கிடைக்காமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.

News September 13, 2025

மதுரை: உங்க நீதிமன்ற CASE பற்றி தெரிந்து கொள்ள..!

image

மதுரை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phone ல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT..!

error: Content is protected !!