News November 4, 2025
விருதுநகர்: இளைஞர் குத்திக் கொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட உவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் மகன் செந்தாமரைக்கண்ணன்(34). இவரை அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கர்ணா என்பவர் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு குத்திக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
விருதுநகர்: தலைமை செயலகத்தில் வேலை

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
News November 5, 2025
வெம்பக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் என்ற கண்ணன்(42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
விருதுநகர்:காரின் மேல் அமர்ந்து சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து விதிகளை மீறிய மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளது.


