News November 4, 2025
சல்யூட் மேடம்.. கிரிக்கெட்டர் to DSP தீப்தி சர்மா!

உலகக்கோப்பையை வெல்ல காரணமான இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு உத்தர பிரதேச காவல்துறையில் DSP பதவி வழங்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை இறுதி போட்டியில் 50 ரன்கள் & 5 விக்கெட்களை வீழ்த்தி கோப்பையை வெல்ல தீப்தி சர்மா முக்கிய பங்காற்றினார். தொடர் நாயகி விருதையும் வென்ற தீப்தி சர்மா, ஒட்டுமொத்த 2025 உலகக்கோப்பையில் 215 ரன்களையும், 22 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார்.
Similar News
News November 4, 2025
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க… PHOTOS

தற்காலத்தில் சிறுவர்கள் எப்போதும் போனுடனே இருக்கின்றனர். இதனால் அவர்களின் கவனக்குவிப்பு திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு தெரிந்த ஐடியாவையும் கமெண்ட் பண்ணுங்க!
News November 4, 2025
தமிழகத்தை கலவர பூமியாக்கும் அன்புமணி: ராமதாஸ்

பாமக MLA <<18196872>>அருள்<<>> மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், நடைபயணம் என்ற பெயரில் தன்னுடன் உள்ள பாமகவினரை ஒழிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியுள்ள அவர், அன்புமணியின் நடைபயணத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறியுள்ளார். அன்புமணியின் கும்பலை தடை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 4, 2025
இரவில் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும், பல இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இரவிலும் மழை தொடரும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாய் இருங்கள் நண்பர்களே!


