News November 4, 2025
பிரபல நடிகை காலமானார்

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை டயான் லாட் (89) காலமானார். ‘Alice Doesn’t Live Here Anymore’ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘Wild at Heart’ (1990), ‘Rambling Rose’ (1991) திரைப்படங்களுக்காக அவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கள் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News November 4, 2025
தமிழகத்தை கலவர பூமியாக்கும் அன்புமணி: ராமதாஸ்

பாமக MLA <<18196872>>அருள்<<>> மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், நடைபயணம் என்ற பெயரில் தன்னுடன் உள்ள பாமகவினரை ஒழிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியுள்ள அவர், அன்புமணியின் நடைபயணத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறியுள்ளார். அன்புமணியின் கும்பலை தடை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 4, 2025
இரவில் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும், பல இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இரவிலும் மழை தொடரும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனமாய் இருங்கள் நண்பர்களே!
News November 4, 2025
SIR வந்தால் தமிழ்நாடு இன்னொரு பிஹாராகும்: சீமான்

மக்களை பதற்றமாக வைத்திருக்கவே, SIR-ஐ பாஜக கொண்டு வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். போலி வாக்காளர்களை நீக்குவது சரி என்று கூறியுள்ள அவர், ECI கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் தான் வாக்காளர் பட்டியலில் பெயரே இருக்கும் என்றால், அது எப்படி சரி என கேள்வி எழுப்பியுள்ளார். SIR செயல்படுத்தப்பட்டால், விரைவில் தமிழ்நாடு இன்னொரு பிஹார் ஆகிவிடும் என்றும் விமர்சித்துள்ளார்.


