News November 4, 2025
அரியலூர்: சாலை விபத்தில் முகம் சிதைந்து ஒருவர் பலி!

தா.பழூர், தாதம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (25). இவர் நேற்று இரவு தனது நண்பர் சிவா (25) என்பவரை அழைத்துக் கொண்டு தா.பழூரில் இருந்து காரைக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்றபோது, மகேஷ் ஓட்டி சென்ற பைக், லாரி ஒன்றின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மகேஷ் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிவா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News November 4, 2025
அரியலூர்: வீரர்களை வாழ்த்திய அமைச்சர்

அரியலூர் மாவட்டம், குன்னம் தொகுதி செந்துறை ஒன்றியம் பொன் பரப்பி மேல்நிலைப்பள்ளியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கான தகுதி தேர்வு (நவ.4) இன்று நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு வீரர் மற்றும் வீராங்கனை வாழ்த்தினார். இதில் செந்துறை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
News November 4, 2025
அரியலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு வினா-விடை தொகுப்பு வழங்கல்

செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 10மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு, பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள உதவும் “தேர்வை
வெல்வோம்” என்ற வழிகாட்டி வினா-விடை தொகுப்பினை இன்று (நவ.04) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் தேர்வுகளை நம்பிக்கையுடன்
எதிர்கொண்டு, வெற்றிபெற மாணவ-மாணவியரை வாழ்த்தினார்.


