News November 4, 2025
திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடூரம்!

ஜோலார்பேட்டை அடுத்த கலர் வட்டம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, (நவ.2) அன்று பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வைத்து ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வல்லரசை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த நபரை நேற்று (நவ.3) போலீசார் சிறையில் அடைந்தனர்.
Similar News
News November 4, 2025
திருப்பத்தூர்:மது போதையில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலி

சென்னை, பூந்தமல்லி சேர்ந்தவர் ராஜா (வயது 32) ஐடி நிறுவன பங்குதாரர் ஊழியர்கள் உட்பட பேர் கடந்த நவ.1 ம் தேதி சனிக்கிழமை ஏலகிரி மலை சுற்றி பார்க்க வந்தனர். அப்போது நேற்று நவ.3 கொட்டையூர் நட்சத்திர ஓட்டலில் தங்கி மது போதையில் நீச்சல் குளத்தில் குறித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மது போதையில் இருந்ததால் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை.
News November 4, 2025
திருப்பத்தூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருப்பத்தூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


