News November 4, 2025

Cinema Roundup: இன்று ‘பராசக்தி’ பாடல் புரமோ ரிலீஸ்

image

*’பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. *ராம் சரணின் ‘PEDDI’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் Chikiri Chikiri என்ற பாடலை உருவாக்கியுள்ளார். *’பாகுபலி தி எபிக்’ 3 நாள்களில் 38.9 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *’ஜெயிலர் 2′ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவு. *ஆலியா பட் நடிக்கும் ‘ஆல்ஃபா’ ரிலீஸ் ஏப்ரல் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Similar News

News November 4, 2025

பிஹார் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் நவ.6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவ.11-ம் தேதி நடைபெற உள்ளது.

News November 4, 2025

BREAKING: நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம்

image

சென்னையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

News November 4, 2025

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

image

இன்று காலையில் திமுகவில் இணைந்த OPS ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். 2021-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார்.

error: Content is protected !!