News November 4, 2025
1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் 1,429 சுகாதார ஆய்வாளர் (கிரேட் 2) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் பாடநெறி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். மெரிட் அடிப்படையிலான தேர்வு முறைக்கு வரும் 16-ம் தேதிக்குள் mrb.tn.gov.in தளத்தில் விண்ணப்பிக்கவும்.
Similar News
News November 4, 2025
இந்தியாவின் லெஜண்ட் தொழிலதிபர் காலமானார்

இந்தியாவின் பழம்பெரும் கூட்டு தொழில் நிறுவனமான, இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா (85), வயது முதிர்வு காரணமாக காலமானார். மும்பையில் 1914-ல் தொடங்கப்பட்ட இக்குழுமம், இந்தியாவில் தொடங்கி பல்வேறு உலக நாடுகளில் விரிவடைந்துள்ளது. அசோக் லேலண்ட் வாகனங்கள் இந்த குழுமத்திற்கு சொந்தமானவை தான். பிரிட்டனில் வசித்து வந்த கோபிசந்த், 2023-ல் இக்குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
News November 4, 2025
சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்து வருகின்றன. மாருதியை தொடர்ந்து ஹோண்டா, பண்டிகை சலுகைகளுடன் சூப்பர் ஆஃபர்களை அறிவித்துள்ளது. எந்த மாடல் காருக்கு, அதிகபட்ச ஆஃபர் என்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்க எந்த கார் வாங்க ப்ளான் பண்ணுறீங்க?
News November 4, 2025
செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறை

1,000 குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், USA-ல் செய்யாத கொலைக்காக, இந்திய வம்சாவளி சுப்ரமணியம் வேதம் 43 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். நிரபராதி என தீர்ப்பு வந்தாலும், அவரை நாடு கடத்த USA அதிகாரிகள் மீண்டும் சிறைபிடித்தனர். சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளரான சுப்ரமணியன் கோர்ட்டை நாட, நாடு கடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


