News November 4, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.03) இரவு 10 மணி முதல் இன்று (நவ.04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 4, 2025
நாகை ஆட்சியருக்கு எம்.பி. கோரிக்கை

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் மருதூர், தகட்டூர், பஞ்சநதிகுளம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி விவசாய பணிகளுக்கு இடையூறாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுமாறு நாகை ஆட்சியருக்கு எம்.பி.செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
News November 4, 2025
நாகை: கிராம ஊராட்சி செயலர் வேலை!

நாகை மாவட்டத்தில் 18 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
நாகை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் தர்கா ஷரிப் கந்தூரி பெருவிழாவை முன்னிட்டு வரும் நவ.1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை அப்பகுதியில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என குத்தகைதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 19-ந் தேதியுடன் குத்தகை உரிமம் நிறைவடைவதால் நுழைவு கட்டண வசூல் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் லீனா சைமன் தெரிவித்துள்ளார்.


