News November 4, 2025
கிருஷ்ணகிரி: 3ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே மஞ்சமேடு கிராமத்தில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கஜ லட்சுமி சிற்பம், யானை, குத்துவிளக்கு போன்ற வணிகச் சின்னங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், இது 825 ஆண்டுகள் பழமையான வணிகக்குழு கல்வெட்டாகும் என உறுதி செய்யப்பட்டது.
Similar News
News November 4, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகளுக்கு அழைப்பு. இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு விவசாயிகள் வருகிற (நவ.10) மதியம் 2 மணிக்குள் வரவேண்டும். மேலும் மூன்று கோரிக்கை மனு வழங்க (அஜெண்ட) வேளாண்மை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News November 4, 2025
கிருஷ்ணகிரி: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

கிருஷ்ணகிரியில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
கிருஷ்ணகிரி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


