News November 4, 2025
திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (3.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News November 4, 2025
திருவள்ளூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருவள்ளூர்: நீரில் மூழ்கி குழந்தைகள் பலி; உதவிய CM

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் கடந்த வாரம் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகள் ரியாஸ் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் இன்று (நவ.4), ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தனர்.
News November 4, 2025
திருவள்ளூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


