News November 3, 2025
பாஜக தாக்க தயாராகிவிட்டது: கே.என்.நேரு

திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து பாஜக தாக்க தயாராகிவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பாஜக தாக்குதலின் முதல் பலி நானாகிவிட்டேன் எனவும், இருப்பினும் எந்த தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, நகராட்சி நிர்வாகத்துறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதாக <<18146062>>கே.என்.நேரு<<>> மீது அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி இருந்தது.
Similar News
News November 4, 2025
ஓவராக பேசிய மேனேஜர்.. கொலை செய்த ஊழியர்!

பெங்களூருவில் IT கம்பெனியில் பணிபுரிந்து வரும் சோமலா வம்சி(24), கண் கூசுவதால் ஆபீசில் உள்ள லைட்டை அணைக்கும்படி, மேனேஜர் பீமேஷ் பாபுவுடன்(41) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, நிதானமிழந்த வம்சி மிளகாய் பொடியை தூவி, பீமேஷ் நெஞ்சில் Dumbbells-ஐ கொண்டு அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பீமேஷ் பாபு மரணமடைந்துள்ளார். கோபத்தால் இன்று இருவரின் வாழ்க்கை அழிந்துவிட்டது!
News November 4, 2025
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாள்கள் வரை விடுமுறை

மார்ச் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை +2 பொதுத்தேர்வும், மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளன. மாணவர்கள் சிரமமின்றி தேர்வுக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் 2 – 5 நாள்கள் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதனால், பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 4, 2025
SIR: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை?

தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றியதோடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளன. இந்நிலையில், SIR பணிகளை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இன்று(நவ.4) தொடங்கியுள்ளது. இந்த SIR-ல் மொத்தம் 4 வகையான படிவங்கள் உள்ள நிலையில், அவை குறித்து அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க. SIR-க்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பதை அறிய <<18127077>>இங்கே கிளிக்<<>> செய்யவும்…


