News November 3, 2025
அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள்

அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன. அணு ஆயுதங்களை, சில நாடுகள் அதிகாரப்பூர்வமாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் வைத்திருக்கின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறிவித்த நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
கோவை சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை உறுதி: CM

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனித தன்மையற்றது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூர குற்றச்செயல்களை கண்டிக்க எந்த கடுஞ்சொல்லும் போதாது என்று கூறியுள்ள அவர், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத்தர, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 4, 2025
பரபரக்கும் IPL Trade.. போட்டி போடும் அணிகள்!

வரும் 2026-ம் ஆண்டுக்கான IPL வீரர்கள் Trade-ல் இந்த மூன்று மாற்றங்கள் நிகழ, அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. வெளியாகி வரும் செய்திகளின் படி, ★GT அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், CSK அணிக்கு மாறலாம் ★DC அணியின் KL ராகுல், KKR அணியில் மாறக்கூடும் ★RR கேப்டன் சஞ்சு சாம்சன், DC-க்கு இணையலாம். டிசம்பர் மாதத்திற்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News November 4, 2025
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

2025 – 2026 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 11 – மொழிப்பாடம், மார்ச் 16 – ஆங்கிலம், மார்ச் 25 – கணிதம், மார்ச் 30 – அறிவியல், ஏப்.2 – சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன. நடப்பாண்டில் 8,70,000 மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். மே 5-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


