News November 3, 2025
சென்னிமலை அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சென்னிமலை அருகே ஒட்டவலசு , முத்தம்மாள்,60;, சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அவரது வீட்டை ஒட்டியவாறு மண் சுவர்களுடன் கூடிய ஆட்டு கொட்டகை உள்ளது. இன்று மதியம் முத்தம்மாளின் பக்கத்து வீடு மாயம்மாள் ,முத்தம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்த போது முத்தம்மாள் ஆட்டு கொட்டகை சுவர் இடிந்து விழுந்து இறந்து போனநிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை .
Similar News
News November 4, 2025
ஈரோடு: BE போதும் ரூ.1.42 லட்சம் சம்பளம்

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு BE முடித்து கேட் தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும். ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (ம) மேலும், விவரங்களை பார்க்க<
News November 4, 2025
ஈரோடு மின் பயனீட்டாளர்களுக்கான குறை தீர்க்கும் நாள்

ஈரோடு ஈ.வி.என் சாலையில் உள்ள செயற்பொறியாளர்/இயக்குதலும் பேணுதலும்/நகரியம்/ஈரோடு கோட்ட அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் 05.11.2025 காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், அ.வீரப்பன்சத்திரம், சம்பத்நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு பகுதி மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
News November 4, 2025
ஈரோடு: ரேஷன் கார்டில் பிரச்சனையா?

ஈரோடு மாவட்ட பொது வினியோகதிட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் தலா 1 ரேஷன் கடையில் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் புதியரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மட்டும் நீக்குதல், போன் எண் சேர்த்தல் போன்ற கோரிக்கை மனுகளை வழங்கலாம்.


