News November 3, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 554 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய தண்ணீர் இணைப்பு, தொகுப்பு வீடு மனு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட 554 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

திருச்சி வழியாக மதுரை – ஓகா இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் இருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக குஜராத் மாநிலம் ஓகாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட நாளில் இருந்து 3 வது நாள் ஓகா சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

திருச்சி: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா ?

image

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான பல்வேறு முக்கிய சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். (குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கு மட்டுமே இது பொருந்தும்) SHARE NOW!

News November 4, 2025

திருச்சி: கார் மோதி பரிதாப பலி

image

காணகிளியநல்லூர் அடுத்த குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் தச்சன்குறிச்சியிலிருந்து குமுளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த கார் ராஜேந்திரன் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட.நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!