News November 3, 2025

34 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

image

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகரை சேர்ந்த மூன்று விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் நவ.17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

நாகை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் தர்கா ஷரிப் கந்தூரி பெருவிழாவை முன்னிட்டு வரும் நவ.1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை அப்பகுதியில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என குத்தகைதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 19-ந் தேதியுடன் குத்தகை உரிமம் நிறைவடைவதால் நுழைவு கட்டண வசூல் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் லீனா சைமன் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

நாகை: சாதி சான்றிதழ் தொலைந்து விட்டதா ?

image

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம்.<> இ-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான பல்வேறு முக்கிய சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். (குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கு மட்டுமே இது பொருந்தும்) SHARE NOW!

News November 4, 2025

நாகை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) தொடர்பாக சந்தேகங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலக தொலைபேசி எண்களை (நாகை – 04365-248833, கீழ்வேளூர் – 04366-275493, வேதாரண்யம் – 04369-299650) தொடர்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!