News November 3, 2025
அரியலூர்: நான்கு வழி சாலையை திறந்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (நவ.3) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக, அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழித் தடத்திலிருந்து, நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள, விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், மதனத்தூர் சாலை கி.மீ 6.8 முதல் 27.6 வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Similar News
News November 4, 2025
அரியலூர்: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <
News November 4, 2025
அரியலூர்: தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஆமணக்கந் தோண்டி பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு 10 மணி அளவில் நடந்து சென்ற நபர் மீது தனியார் பேருந்து மோதியதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 4, 2025
அரியலூர்: சாலை விபத்தில் முகம் சிதைந்து ஒருவர் பலி!

தா.பழூர், தாதம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (25). இவர் நேற்று இரவு தனது நண்பர் சிவா (25) என்பவரை அழைத்துக் கொண்டு தா.பழூரில் இருந்து காரைக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்றபோது, மகேஷ் ஓட்டி சென்ற பைக், லாரி ஒன்றின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மகேஷ் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிவா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


