News November 3, 2025

திருவாரூர்: வாக்குச்சாவடி பயிற்சியில் ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Similar News

News November 4, 2025

திருவாரூர்: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான பல்வேறு முக்கிய சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். (குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கு மட்டுமே இது பொருந்தும்) SHARE NOW!

News November 4, 2025

திருவாரூர் வருகை தந்த பிரபல நடிகர்!

image

பக்ரைனியில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டியில், வடுவூர் பகுதியில் சேர்ந்த அபினேஷ் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றார். அவரை வாழ்த்தும் விதமாக நேரடியாக வடுவூருக்கு வந்த நடிகர் துருவ் விக்ரம் அபினேஷை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News November 4, 2025

திருவாரூர்: சாராயம் கடத்திய இருவர் கைது

image

நன்னிலம் பேரளம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், கடத்தி வந்த புதுச்சேரி சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!