News November 3, 2025
டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அடி.. EX RBI கவர்னர் வார்னிங்

டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள HIRE சட்டத்தால் இந்தியா கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸிங் முறையில் பெறப்படும் சேவைகளுக்கு 25% வரிவிதிக்க டிரம்ப் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால், இந்தியாவின் IT, BPO உள்ளிட்ட சேவை துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கவலை எழுப்பியுள்ளார்.
Similar News
News November 4, 2025
தனித்தொகுதியில் தனி கவனம் செலுத்தும் திமுக!

தனித் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு இதர சாதியினர் ஓட்டுப்போடுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதனால்தான், கடந்த தேர்தல்களில் கூட்டணி வலுவாக இருந்தும், தனித் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றது. குறிப்பாக, பொன்னேரி, வாசுதேவநல்லூர், அவிநாசி உள்ளிட்ட பல தனித் தொகுதிகளில் நீண்டகாலமாக DMK போட்டியிடவில்லை. தற்போது தனித் தொகுதிகளில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.
News November 4, 2025
புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி, அரசம்பட்டி அருகே 3-ம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரியிலிருந்து ஆந்திராவின் பூதலப்பட்டு வரை அதியமான் பெருவழியை ஒட்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக புதிய கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. இதில், தண்டம், குடை, சேவல், பன்றி, ஏர்கலப்பை, குத்துவிளக்கு போன்ற வணிக சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் புதிய ஆய்வுகளுக்கு வழி வகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
News November 4, 2025
எங்களிடம் மோதாதீர்கள் சீமான்: டி.ஜெயக்குமார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை தான் இருக்கிறது; அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும் என்று டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும், காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்றதுதான் சுயமரியாதையா என்று இபிஎஸ்ஸை சீண்டிய சீமானுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் எங்ககிட்ட வந்து மோத வேண்டாம்; அதிமுக தொண்டர்களை வசைபாடினால் நிச்சயம் வாங்கி கட்டிக்கொள்வீர்கள் என எச்சரித்தார்.


