News November 3, 2025
மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைக்கு ஸ்பெஷல் பரிசு

மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வை நாடே கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய மத்தியப் பிரதேச வீராங்கனை கிராந்தி கௌடுக்கு ₹1 கோடி பரிசாக வழங்கப்படும் என அம்மாநில CM மோகன் யாதவ் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் கிராமத்தில் பிறந்து வீராங்கனை கிராந்தி, இந்தியாவுக்கே பெருமை தேடி தந்திருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
Similar News
News November 4, 2025
எங்களிடம் மோதாதீர்கள் சீமான்: டி.ஜெயக்குமார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை தான் இருக்கிறது; அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும் என்று டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும், காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்றதுதான் சுயமரியாதையா என்று இபிஎஸ்ஸை சீண்டிய சீமானுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் எங்ககிட்ட வந்து மோத வேண்டாம்; அதிமுக தொண்டர்களை வசைபாடினால் நிச்சயம் வாங்கி கட்டிக்கொள்வீர்கள் என எச்சரித்தார்.
News November 4, 2025
AK64-ல் அஜித்துக்கு இவர்தான் வில்லனா?

அஜித்- ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் AK64 படத்தின் ருசிகரமான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் அல்லது விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறதாம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரில் அஜித்துக்கு யார் Tough கொடுப்பாங்கனு நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க?
News November 4, 2025
அப்ளை செய்த உடனே பயிர்க் கடன்.. வந்தது புது அப்டேட்!

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க் கடன் வழங்கும் திட்டம் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக தருமபுரியில் 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில் 2 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த நிலையில், உடனடி கடன் வழங்க ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.


