News November 3, 2025

உதவி கேட்பது போல் நடித்து இளைஞரிடம் செல்போன் பறிப்பு.

image

சிங்காநல்லூரை சேர்ந்த டெலிவரி ஊழியர் மாரீஸ்வரன் நேற்று அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ அருந்திய போது, அங்கு வந்த இளைஞர் தனது உறவினருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இறக்கி விட முடியுமா? என கேட்டுள்ளார். பரிதாபத்தில் அவரும் அங்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த இருவர் என மூவரும் சேர்ந்து மாரீஸ்வரனிடம் செல்போனை பறித்து சென்றனர். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 4, 2025

கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 4, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி, காரமடை ஒன்னிபாளையம் கருப்பராயன் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை, தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாகவும், இன்று (நவ.4) இரவு 8 மணி வரை ட்ரோன்கள் இயக்க தடை விதித்தும் கோவை கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

News November 4, 2025

TNAU-வில் காளான் வளர்ப்பு பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக காளான் வளர்ப்பு பயிற்சி (05.11.2025) அன்று நடைபெற உள்ளது. பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆகும். மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-6611336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!