News November 3, 2025

ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு..மிஸ் பண்ணிடாதீங்க!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News November 4, 2025

ராணிப்பேட்டை நிர்வாகிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நேற்று (நவ.03) நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். பின் அமைச்சர் காந்தி, எம்.பி.ஜெகத்ரட்சகன், ஆற்காடு MLA ஈஸ்வரப்பன் உடன் பங்கேற்றனர்.

News November 4, 2025

ராணிப்பேட்டை: குறைதீர் கூட்டத்தில் 248 மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டம் நேற்று (நவ.03) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை, நில எடுப்பு) கௌசல்யா பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கேட்டறிந்தார். பின் மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

News November 4, 2025

முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை போலீஸ் விசாரணை

image

பெருமாள்ராஜபேட்டை ஆர்.என். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஹரி வெங்கடேஷ் 65 இவர் இன்று நவம்பர் 3ம் தேதி அங்குள்ள விநாயகர் கோயில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார் அவரை உறவினர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஹரி வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!