News November 3, 2025
Worldcup நாயகிகளை சந்திக்கும் PM மோடி

முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை PM மோடி நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (புதன் கிழமை) டெல்லியில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய மகளிர் அணிக்கு PM மோடி, அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Similar News
News November 4, 2025
வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்!

✱தேவை: மூங்கில் உப்பு, கூகை நீறு, இலவங்கப்பட்டை பொடி, சீந்தில் சர்க்கரை, மாதுளம் பூ, கற்கண்டு, ஏந்தல் அரிசி பொடி, திப்பிலி ✱செய்முறை: தண்ணீரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து, வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடிக்கவும். சர்க்கரை நோயாளிகள் கற்கண்டு சேர்க்க வேண்டாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News November 4, 2025
DMK அதிகாரத்துக்கு பயப்படும் அரசியல் கட்சிகள்: G.K.வாசன்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று G.K.வாசன் தெரிவித்துள்ளார். திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என சாடினார். மேலும், முறையாக தேர்தல் நடத்த கோட்பாடுகளை வழங்கும் தேர்தல் ஆணையத்தை தோல்வி பயத்தால் ஆளும் திமுக எதிர்க்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 4, 2025
FLASH: 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், நவ.9-ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. குடையை ரெடியா வையுங்க.


