News November 3, 2025

புதுச்சேரி: ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc போதுமானது, சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.11.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News November 4, 2025

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கொடிகள் வரும் 6-ம் தேதி முதல் அகற்றப்படும். ஆகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

பாகூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

image

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்ற கலெக்டர் குலோத்துங்கன், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்தும், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்து, பொது மக்களிடம் மருத்துவ சேவை குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பாகூரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்தார்களா, என ஆய்வு செய்தார்.

News November 4, 2025

புதுவை: சமூக ஆர்வலர்க்கு கொலை மிரட்டல்

image

புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோகுல் காந்திநாத். இவர் நேற்று முன்தினம் கொக்கு பார்க் அருகே தண்ணீர் குழாயில், தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே இறைச்சி கழிவுகள் கிடந்துள்ளது. உடனே அருகில், இருந்த இறைச்சி கடையில் இருந்த ஒருவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, டி.நகர் காவல் நிலையத்தில் கோகுல் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!