News November 3, 2025
குமரி: இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

குமரி மக்களே; Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
ஆரல்வாய்மொழி: கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்

ஆரல்வாய்மொழி போலீசார் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலையில் நேற்று (நவ.3) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி கனிமவளத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் திற்பரப்பஒ சேர்ந்த டிரைவர் சந்திரன்(54) என்பவரை கைது செய்து லாரி உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News November 4, 2025
குமரியில் இலவச கண்புரை சிகிச்சை நடைபெறும் இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இலவச கண்புரை சிகிச்சை முகாம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தெளிவான நீடித்த பார்வை கிடைப்பது மற்றும் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இந்த முகமானது நாளை அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
News November 4, 2025
நாகர்கோவில்: தனியார் குடோனில் தீவிபத்து

அஞ்சுகிராமம் அருகே ராமனாதிச்சன் புதூரில் தனியார் குடோன் உள்ளது. இங்கு மருந்துக்கழிவுகள், துணி கழிவுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (நவ.3) காலை குடோனில் உள்ள பொருட்கள் தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


