News November 3, 2025
BREAKING: நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 35 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நாகை நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News November 4, 2025
நாகை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) தொடர்பாக சந்தேகங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலக தொலைபேசி எண்களை (நாகை – 04365-248833, கீழ்வேளூர் – 04366-275493, வேதாரண்யம் – 04369-299650) தொடர்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
நாகை: அரசு வேலை தேடுவோருக்கு சூப்பர் வாய்ப்பு

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தனியார் பயிற்சி மையங்களுடன் இணைந்து நடைபெறும் இந்த வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பலர் அரசு துறைகளில் பணியமர்ந்துள்ளனர். எனவே அரசு வேலை தேடுவோர் இந்த இலவச பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
News November 4, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.03) இரவு 10 மணி முதல் இன்று (நவ.04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


