News April 19, 2024
வாக்கு செலுத்திய அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், நாகையில் சிபிஎம் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும், தேனியில் தங்க தமிழ்செல்வன், தருமபுரியில் சவுமியா அன்புமணி, சென்னையில் தமிழிசை, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய வேட்பாளர்களும் காலையிலேயே தங்களது வாக்குகளை செலுத்தினார்.
Similar News
News August 18, 2025
விரக்தியின் உச்சத்தில் அன்புமணி: அமைச்சர்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணி தோற்றதால் இந்த மாவட்டத்தை ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என அன்புமணி தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய அமைச்சர் MRK பன்னீர் செல்வம், தருமபுரியை புறக்கணித்திருந்தால் 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு எப்படி 100 சதவீதம் வெற்றிக் கிடைத்திருக்கும் என கேட்டார். மேலும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் எனவும் விமர்சித்தார்.
News August 18, 2025
சமூக அர்ப்பணிப்புக்கு கிடைத்த மணிமகுடம்: EPS வாழ்த்து

NDA கூட்டணியின் சார்பில் தமிழர் ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ள PM மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு நன்றி என EPS தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த சமூக சேவை மற்றும் மக்கள் மீதான அர்ப்பணிப்புக்கு கிடைத்த மணிமகுடம் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News August 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.