News November 3, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000.. உதயநிதி புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகைக்கு கூடுதலாக அப்ளை செய்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அடுத்த மாதம் தகுதியானோருக்கு ₹1,000 வழங்கப்படும் எனவும் DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், தற்போது, 1.20 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படுவதோடு, மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.
Similar News
News November 4, 2025
பணவரவை அதிகரிக்கும் ஏலக்காய் பரிகாரம்!

பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, ஒரே ஒரு ஏலக்காயை வலது கையில் வைத்து, முழு மனதுடன் ‘ஓம் நமோ நாராயணாய கோவிந்தாய மாதவாய விஷ்ணவே நமஹ’ என கூறி வழிபட வேண்டும். பிறகு, கையில் இருக்கும் ஏலக்காயை பணம் வைக்கும் இடத்தில், வைக்க வேண்டும். SHARE IT.
News November 4, 2025
தமிழகத்தில் SIR பணிகள் இன்று தொடக்கம்

TN-ல் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று முதல் டிச.4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெற உள்ளது. SIR கணக்கீட்டுப் படிவத்தை மக்கள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுடன் இணைந்து அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ல் வெளியாகும்.
News November 4, 2025
அடுத்த தலைவர் கலகத்தை தொடங்கினார்.. பரபரப்பு!

தமிழ்நாடு காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை என மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் அடுத்த கலகத்தை தொடங்கியுள்ளார். தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், வாரிசு அரசியலை ஓரங்கட்டிவிட்டு, உழைக்கும் மகளிருக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தேசிய தலைமையை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளார். நடிகை குஷ்பு, விஜயதரணி ஆகியோரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து விலகியது கவனிக்கத்தக்கது.


