News November 3, 2025
ராணிப்பேட்டை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 4, 2025
ராணிப்பேட்டை: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 முக்கிய தினங்கள் குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி இன்று நவ.4 முதல் டிச.4 வரை, பெயர்களை சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் டிச.9 முதல் ஜன.8,2026 வரை, இறுதி வாக்காளர் பட்டியல் 7.2.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.3) இராணிப்பேட்டை மாவட்டத்தில் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர், 24.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 72,880 பயனாளிகளுக்கு 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


