News November 3, 2025

நீலகிரி: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

நீலகிரி மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

Similar News

News November 4, 2025

நீலகிரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 21 தேதி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விவசாய தொடர்பான கோரிக்கைகளை எதிர்வரும் 7ம் தேதிக்குள், தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, உதகை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

கூடலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிற்சி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA) பயிற்சியினை, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கூடலூர் எம்எல்ஏ பொன். ஜெயசீலன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News November 3, 2025

நீலகிரியில் இலவச தையல் பயிற்சி!

image

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 7ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!