News November 3, 2025
அரியலூர்: 2 நாட்களில் 68 வழக்குகள் பதிவு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காவல் துறையினர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அதன்படி பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 34 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 34 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனஅரியலூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 4, 2025
அரியலூர்: வாக்காளர் கணக்கெடுப்பு பணி துவக்கம்

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று (நவ.04) முதல் தொடங்குகிறது. இப்பணித் தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாடு தொலைப்பேசி எண்.1950-ஐ வாக்காளர்கள் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
அரியலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 3, 2025
அரியலூர்: நான்கு வழி சாலையை திறந்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (நவ.3) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக, அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழித் தடத்திலிருந்து, நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள, விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், மதனத்தூர் சாலை கி.மீ 6.8 முதல் 27.6 வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


