News November 3, 2025
பெண்கள் வெளியே தலைகாட்டவே அச்சம்: நயினார்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட விவகாரம் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து நயினார், வீட்டில் இருந்தாலும் வெளியில் போனாலும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே பொழுது விடிகிறது; DMK ஆட்சியில் பெண்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர். ஆனால், CM கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
Similar News
News November 4, 2025
காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியவை!

காலையில் எழுந்தவுடன் பின்பற்றும் சில பழக்கங்கள், அன்றைய நாள் முழுவதும் நம் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். காலை பொழுதில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே போட்டோக்களாக பட்டியலிட்டுள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 4, 2025
பொங்கல் விடுமுறை.. பஸ்களில் புக்கிங் தொடங்கியது

அரசு பஸ்களில் பொங்கல் தொடர் விடுமுறைக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. 90 நாள்களுக்கு முன்பான புக்கிங் வசதி இருப்பதால், சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக tnstc தளத்தில் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பஸ்களில் புக்கிங் அதிகம் இருந்தால், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு வெளியிடப்படும்.
News November 4, 2025
அன்புமணி, தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்கும் பாஜக?

அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை BJP மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால், NDA கூட்டணிக்கு கூடுதல் கட்சிகளை அழைத்து வர BJP வியூகம் அமைத்து வருகிறது. இன்று பைஜயந்த் பாண்டா தலைமையில் பாஜக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.


