News November 3, 2025
வேலூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.
Similar News
News November 4, 2025
வேலூர் துணை முதல்வரை வரவேற்ற கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (நவம்பர் 3) வேலூருக்கு வருகை புரிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆட்சியர் சுப்புலட்சுமி மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதில் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 4, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (நவம்பர் 03) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 3, 2025
வேலூர்: தமிழக அரசின் ரூ.414 கோடி நலத்திட்ட உதவிகள்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.04) வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


