News November 3, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.

Similar News

News November 4, 2025

ராணிப்பேட்டை: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 முக்கிய தினங்கள் குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி இன்று நவ.4 முதல் டிச.4 வரை, பெயர்களை சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் டிச.9 முதல் ஜன.8,2026 வரை, இறுதி வாக்காளர் பட்டியல் 7.2.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.3) இராணிப்பேட்டை மாவட்டத்தில் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர், 24.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 72,880 பயனாளிகளுக்கு 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

error: Content is protected !!