News November 3, 2025

வீணாவதை பசித்தவருக்கு கொடுக்கலாமே!

image

மக்கள் பசியால் தவிக்கும் அதே நேரத்தில்தான், டன் கணக்கிலான உணவுகளும் வீணாக்கப்படுகின்றன. இச்சூழலில்தான், சூப்பர் மார்க்கெட், கடைகளில் பழம், காய்கறி, பிரெட், பிஸ்கெட் போன்றவை விற்கப்படாமல் போனால், அவற்றை பசியால் வாடுபவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை 2016-ல் பிரான்ஸ் அரசு கொண்டுவந்தது. பசியால் வாடுபவர்கள் அதிகமிருக்கும் இந்தியாவிலும் இச்சட்டம் கொண்டுவரலாம் அல்லவா. நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News November 4, 2025

காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியவை!

image

காலையில் எழுந்தவுடன் பின்பற்றும் சில பழக்கங்கள், அன்றைய நாள் முழுவதும் நம் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். காலை பொழுதில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே போட்டோக்களாக பட்டியலிட்டுள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

News November 4, 2025

பொங்கல் விடுமுறை.. பஸ்களில் புக்கிங் தொடங்கியது

image

அரசு பஸ்களில் பொங்கல் தொடர் விடுமுறைக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. 90 நாள்களுக்கு முன்பான புக்கிங் வசதி இருப்பதால், சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக tnstc தளத்தில் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பஸ்களில் புக்கிங் அதிகம் இருந்தால், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு வெளியிடப்படும்.

News November 4, 2025

அன்புமணி, தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்கும் பாஜக?

image

அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை BJP மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால், NDA கூட்டணிக்கு கூடுதல் கட்சிகளை அழைத்து வர BJP வியூகம் அமைத்து வருகிறது. இன்று பைஜயந்த் பாண்டா தலைமையில் பாஜக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!