News November 3, 2025
ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்த அதிரடி மாற்றம்.. கவனியுங்க!

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில், ✱முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் & மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, Lower birth வழங்கப்படும் ✱இரவு 10- காலை 6 மணி வரை மட்டுமே பயணம் செய்பவர்களுக்கு Sleeping accommodation கிடைக்கும் ✱Side upper berth முன்பதிவு செய்தவர்களுக்கு, இரவு 10- காலை 6.00 மணி வரை, Side lower berth சீட்டில் அமர உரிமை இல்லை.
Similar News
News November 4, 2025
Chat Gpt-ல் மருத்துவம், சட்ட ஆலோசனைகள் நிறுத்தம்

Chat Gpt-ஐ இனி கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Chat Gpt மருத்துவம், சட்டம் மற்றும் நிதி சார்ந்தவற்றில் ஆலோசனைகளை வழங்காது என Open AI நிறுவனம் கூறியுள்ளது. Chat Gpt பயன்படுத்தி பலரும் மருத்துவரை நாடாமல் தாங்களாக சிகிச்சை எடுப்பது உயிருக்கு ஆபத்தாக மாறும் காரணத்தினால், Open AI நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
News November 4, 2025
விவசாயிகளுக்கு அதிக யூரியா தந்துள்ளோம்: மத்திய அரசு

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 4, 2025
நவம்பர் 4: வரலாற்றில் இன்று

*1884–தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள். *1897–தாவரவியலாளர் ஜானகி அம்மாள் பிறந்தநாள். *1967–எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு. *1972–நடிகை தபூ பிறந்தநாள். *2012–சமையல் கலைஞர் ஜேக்கப் சகாயகுமார் அருணி மறைந்த நாள். *2022–தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைந்த நாள்.


