News November 3, 2025
அனில் அம்பானியின் ₹3,084 கோடி சொத்துக்கள் முடக்கம்

அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ₹3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியது. RHFL மற்றும் RCFL நிறுவனங்கள் மூலம் வங்கியில் இருந்து திரட்டப்பட்ட பொது பணத்தை முறைகேடாக கையாண்டதாக ED வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனில் அம்பானியின் 40-க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்கி ED நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News November 4, 2025
விவசாயிகளுக்கு அதிக யூரியா தந்துள்ளோம்: மத்திய அரசு

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 4, 2025
நவம்பர் 4: வரலாற்றில் இன்று

*1884–தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள். *1897–தாவரவியலாளர் ஜானகி அம்மாள் பிறந்தநாள். *1967–எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு. *1972–நடிகை தபூ பிறந்தநாள். *2012–சமையல் கலைஞர் ஜேக்கப் சகாயகுமார் அருணி மறைந்த நாள். *2022–தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைந்த நாள்.
News November 4, 2025
ஜுபின் கார்க் கொலை செய்யப்பட்டுள்ளார்: அசாம் CM

பாடகர் ஜுபின் கார்க்கின் மரணமானது, விபத்து அல்ல அது கொலை என்று அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இவ்வழக்கை SIT தீவிரமாக விசாரிக்கும் நிலையில், டிச.8-ற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி அமித்ஷாவிடம் பேசியதாகவும், வெளிநாட்டில் அவர் மரணமடைந்ததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


